சுடச்சுட

  

  "நாகை குளங்கள் சீரமைப்புப் பணி:செப். 15-ம் தேதிக்குள் நிறைவுப் பெறும்

  By 'நாகப்பட்டினம்,  |   Published on : 02nd September 2013 01:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகையில் நடைபெறும் குளங்கள் சீரமைப்புப் பணிகள் செப். 15-ம் தேதிக்குள் நிறைவுப் பெறும் என்றார் மாநில மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால்.

  நாகை நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெறும், வளர்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.

  நாகை கோட்டைவாசல் அருகே நடைபெறும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்  அமைக்கும் பணி, புத்தூர் - பாலையூர் வரை ரூ. 3.15 கோடி மதிப்பில் நடைபெறும் கிராமச் சாலைகள் அமைப்புப் பணி, புத்தூரில் நபார்டு திட்டம் மூலம் ரூ. 58 லட்சம் மதிப்பில் நடைபெறும் சாலைப் பணி, ரூ. 12 லட்சம் மதிப்பில் நடைபெறும் வண்ணான் குளம் தூர்வாரும் பணி ஆகியவற்றை அமைச்சர் ஆய்வு செய்தார்.

  பின்னர், நாகை நகராட்சி அலுவலக புதிய கட்டடம் கட்டும் பணி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகக் கட்டடம் கட்டும் பணி, வேளாண் துறை இணை இயக்குநர் அலுவலகம் கட்டும் பணி ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார்.

  ஆய்வுகளின் போது, பணிகளை உரிய தரத்துடன், உரிய காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

  ஆய்வுகளுக்குப் பின்னர், அமைச்சர் கே.ஏ. ஜெயபால் தெரிவித்தது:

  நாகை நகராட்சி பராமரிப்பில் உள்ள 11 குளங்களின் தூர்வாரும் பணிகள், அரசின் நிதி உதவியுடன் ரூ. 1.5 கோடி மதிப்பில் நடைபெறுகிறது. வண்ணான்குளம்  தூர்வாரப்பட்டு, கரைகளை பலப்படுத்தும் பணிகள் முடிவுற்ற பின்னர், அந்தக் குளத்தையொட்டி அமைந்துள்ள சலவைக்கூடத்தின் மராமத்துப் பணிகள் நடைபெறும். இதன்மூலம், 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறும். குளம் தூர்வாரும் பணிகள் செப். 15-ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக் கொண்டுவரப்படும் என்றார் அமைச்சர். மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி, மாவட்ட ஊராட்சித் தலைவர் ஏ.கே. சந்திரசேகரன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஆர். சங்கர், செயற்பொறியாளர் வி. செல்வராஜ், வருவாய்க் கோட்டாட்சியர் வே. மணிகண்டன், நகராட்சி பொறியாளர் முருகேசன், நகர்மன்றத் தலைவர் மஞ்சுளா சந்திரமோகன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் தங்க. கதிரவன், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ். ஆசைமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai