சுடச்சுட

    

    நாகையில் உள்ள காயாரோகணசுவாமி உடனாய நீலாயதாட்சியம்மன் கோயிலில், விஸ்வரூப விநாயகர் சிலையிலிருந்த விஷ வண்டுகளை நாகை தீயணைப்புப் படையினர் சனிக்கிழமை அழித்தனர்.

    விநாயகர் சதுர்த்தியையொட்டி, நாகையில் நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பிரதானமாக இடம் பெறுவது 32 அடி உயரத்திலான விஸ்வரூப விநாயகர் சிலை. மூங்கில் கம்புகள் மற்றும் அட்டை உள்ளிட்டவைகளால் தயாரிக்கப்பட்ட இந்தச் சிலை, ஊர்வலத்துக்குப் பின்னர்,  நீலாயதாட்சியம்மன் கோயிலில் வைத்து பாதுகாக்கப்படும்.

    வரும் 9-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறவுள்ளதையொட்டி, நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் வைக்கப்பட்டிருந்த விஸ்வரூப விநாயகர் சிலையை சீரமைக்க, விஸ்வரூப விநாயகர் சிலை குழுவினர் முயற்சிகள் மேற்கொண்டனர்.   அப்போது, அந்தச் சிலையினுள்ளிருந்து விஷ வண்டுகள் வெளிப்பட்டு, கொட்டியுள்ளது.

    இதுகுறித்து விஸ்வரூப விநாயகர் சிலை குழுவினர், நாகை தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் அளித்தனர்.

    இதைத் தொடர்ந்து, நாகை கோட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை கோட்ட அலுவலர் ராமமூர்த்தி உத்தரவின்பேரில், உதவி கோட்ட அலுவலர் முருகேசன், நிலைய அலுவலர் (பொறுப்பு) கண்ணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள், நீலாயதாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று, அங்கு விஸ்வரூப விநாயகர் சிலையினுள் இருந்த விஷ வண்டுகளை அழித்தனர்.

    தெளிப்பான் மூலம் விஷ வண்டுகளை அழிக்கும் மருந்து தெளிக்கப்பட்டு, சேகரிக்கப்பட்ட விஷ வண்டுகள் தீயிட்டு அழிக்கப்பட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai