Enable Javscript for better performance
\\\"நூறுநாள் வேலை: கூலியை தாமதமின்றி வழங்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    "நூறுநாள் வேலை: கூலியை தாமதமின்றி வழங்க வேண்டும்

    By 'வேதாரண்யம்,  |   Published on : 02nd September 2013 01:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நூறுநாள் வேலை திட்டப் பணியாளர்களுக்கான கூலித் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும் என வேதாரண்யம் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    கூட்டம், அதன் தலைவர் சுசிலாதேவி சரவணன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார், சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியது:

    ஜெயராமன் (அதிமுக): செட்டிப்புலம் வருவாய்க் கிராமத்துடன் உள்ள கரியாப்பட்டினம் கிராமத்தை தனி வருவாய்க் கிராமமாக ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    என். சந்திரசேகரன் (காங்.): மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்ட பணியாளர்களுக்கு கூலி வழங்குவது பல வாரங்களாக தாமதமாகிறது. தென்னடார் உள்ளிட்ட கடலோரக் கிராமங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறக்க வேண்டும். அரசின் பசுமை வீடுகளுக்கு சூரிய சக்தி விளக்குகள் எப்போது பொருத்தப்படும்.

    கே. சுப்பிரமணியன் (அதிமுக): தகட்டூர் பகுதியில் நூறுநாள் வேலையில் அமைக்கப்பட்ட மண் சாலைகள் சேதமாவதைத் தடுக்கவும், பயனுள்ளதாக மாற்றவும் ஜல்லி கல்களால் சாலையை மேம்படுத்த வேண்டும்.

    எம். ராஜசேகரன் (அதிமுக): கடிநெல்வயல்- சிறுதலைக்காடு கிராமத்துக்கு குடிநீர் வழங்க புதிய நீர்தேக்கத் தொட்டி அமைக்க எடுக்கப்பட்ட முயற்சிகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அசோக்குமார் (திமுக): பெரியகுத்தகை கிராமத்தில் சேதமடைந்துள்ள 18 மின் கம்பங்களை சீரமைக்க ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

    இதேபோல, உறுப்பினர் முருகையன் (அதிமுக), முருகேசன் (திமுக) உள்ளிட்டோரும் தங்களது தொகுதி பிரச்னை குறித்து பேசினர்.

    வளர்ச்சித் திட்டப் பணிகள் வழங்குவதில் தனது வார்டு புறக்கணிக்கப்படுவதாகக் கூறி அதிமுக உறுப்பினர் அ. தனலட்சுமி வெளிநடப்பு செய்தார்.

    தலைவர், ஆணையர் பதில்: வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேதாரண்யம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் 518 பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணிகளில், 258 பணிகள் முடிந்துள்ளன. வேலைத் திட்ட பணிகள் விவரம் இணையதளத்தில் பதிவுசெய்து, பின்னர் கூலி வங்கிகளுக்கு அனுப்பப்படுகிறது. வங்கிகளில் பணியாளர் பற்றாக்குறையால் பணம் பயனாளிக்கு செல்வது தமதமாகிறது. பசுமை வீடுகளில் சூரிய சக்கி விளக்குகள் விரைவில் பொருத்தப்படும்.  கரியாப்பட்டினம் கிராமத்தை தனி வருவாய்க் கிராமமாக மாற்றுவது குறித்து அந்தத் துறையின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்படும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai