சுடச்சுட

  

  வீடுகளில் கள்ளச்சாராயம் விற்பனை:2 பெண்கள் உள்பட 6 பேர் கைது

  By மயிலாடுதுறை,  |   Published on : 02nd September 2013 01:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகை மாவட்டம், குத்தாலம் பகுதியில் வீடுகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக, 2 பெண்கள் உள்பட 6 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

  குத்தாலம் பகுதியில் வீடுகளில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, குத்தாலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எஸ். கோபால், மயிலாடுதுறை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் அ. நெப்போலியன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

  வில்லியநல்லூர், அஞ்சாறுவார்த்தலை, கோழிக்குத்தி, கடலங்குடி ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸார் 50 சாக்குகளில் இருந்த 3000 கள்ளச்சாராயப்  பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 1.20 லட்சம் எனக் கூறப்படுகிறது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், இதுதொடர்பாக கோழிக்குத்தி பெரியத்தெருவைச் சேர்ந்த கோ. சுந்தரமூர்த்தி (48), மாதாக்கோவில் தெருவைச் சேர்ந்த சவரிமுத்து மனைவி ஆரோக்கியமேரி (50), வில்லியநல்லூரைச் சேர்ந்த மு. வேலு (30), கடலங்குடியைச் சேர்ந்த கணேசன் (75), அஞ்சாறுவார்த்தலை க. சரோஜா (50), க. சசிக்குமார் (35) ஆகிய 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai