சுடச்சுட

    

    நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டார தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொதுக் குழுக் கூட்டம் ஆயக்காரன்புலம் நாடிமுத்து பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    மாவட்டத் தலைவர் சு. குமார், செயலர் தங்க. சேகர்,பொருளாளர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் புதிய நிர்வாகிகளில் வட்டார அமைப்பின் புதிய தலைவராக இரா. இந்திரசித்தன்,செயலர் க. அண்ணாதுரை, பொருளாளர் தி. செந்தில்நாதன்,மகளிரணிச் செயலர் வி.கே. கவிதா,துணை நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன்,ஆனந்த் முருகு,சேகர்,சுப்பிரமணியன் ஆகியோரும்,பொதுக் குழு உறுப்பினர்களாக மதியரசு,புவனேஸ்வரி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    தேர்தல் ஆணையர்களாக கல்யாணசுந்தரம்,ஜவகர்,அம்பிகாநிதி உள்ளிட்டோர் செயல்பட்டனர். முன்னாள் நிர்வாகிகள் ஜெயசீலன்,சுப்பிரமணியன், ராசேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai