Enable Javscript for better performance
குருக்கத்தி ஊராட்சிக்கு ரூ. 10 லட்சம் பரிசு- Dinamani

சுடச்சுட

    

    குருக்கத்தி ஊராட்சிக்கு ரூ. 10 லட்சம் பரிசு

    By நாகப்பட்டினம்,  |   Published on : 03rd September 2013 03:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டத்தில் தீண்டாமையில்லாத கிராமமாகத் தேர்வு பெற்ற கீழ்வேளூர் வட்டத்துக்குள்பட்ட குருக்கத்தி ஊராட்சிக்கு ரூ. 10 லட்சத்துக்கான பரிசுத் தொகை, நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் வழங்கப்பட்டது.

    நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தலைமை வகித்தார்.

    நாகை மாவட்டத்தில் தீண்டாமை கடைப்பிடிக்காத மத நல்லிணக்க கிராமமாகத் தேர்வு செய்யப்பட்ட, கீழ்வேளூர் வட்டத்துக்குள்பட்ட குருக்கத்தி ஊராட்சிக்கு, உயர்த்தப்பட்ட பரிசுத் தொகை ரூ. 10 லட்சத்துக்கான காசோலை, அந்த ஊராட்சியின் தலைவர் டி. முருகதாஸிடம் வழங்கப்பட்டது.

    சீர்காழி வட்டத்தைச் சேர்ந்த 2 பேருக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதி மூலம் இறப்பு நிதி உதவித் தொகையாக தலா ரூ. 15 ஆயிரத்துக்கான காசோலைகளும், திருநங்கைகள் 5 பேருக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், குறைகளுக்குத் தீர்வு கோரியும் பொதுமக்களிடமிருந்து 240 மனுக்கள் பெறப்பட்டுத் தொடர்புடையத் துறைகளின் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

    மாவட்ட வருவாய் அலுவலர் மு. ஆசியா மரியம், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் பொன்னையா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ. செந்தில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஆர். பாண்டியன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai