சுடச்சுட

  

  சமூக அவலங்களைச் சாடியவர் வள்ளலார் என்றார் தமிழ்தேசப் பொதுவுடமை கடசியின் தலைவர் பெ. மணியரசன்.

  வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் கடைவீதியில் பல்வேறு இலக்கிய அமைப்புகள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இலக்கியச் சங்கம நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது:

  ஆன்மிக வழியில் மக்களின் துயரங்களை முன்வைத்து பாடியதோடு,சமூக அவலங்களையும் சாடியவர் வள்ளலார். தமிழ் இலக்கிய முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்த அவரைக் கவிதையின் தொடக்கம் என்று கூறினால் மிகையாகாது. அவரது சிந்தனை, வழியைப் பின்பற்றியே பாரதி,பாரதிதாசன் போன்றோரும் பாடினர்.

  திராவிடர் என்பது ஒரு இனம் கிடையாது. தமிழர் என்பதே இனம். தாய்மொழி வழிக்கல்வி அரிதாகி வருகிறது. அதன் விளைவு தமிழர் மரபு வழிசார்ந்த மனித உறவை சிதைத்து, நுகர்வுக் கலாசாரமாக மாறி வருகிறது.

  இயந்திரமயமான வாழ்க்கை,இலவசம் போன்றவற்றால் ஒவ்வொரு குடிமகனும் ஆளும் வர்க்கத்தின் வாடிக்கைப் பயனாளிகளாக மட்டுமே நடத்தப்படுவது மாற வேண்டும் என்றார் அவர்.  எழுத்தாளர் வாய்மைநாதன் தலைமை வகித்தார். கவிஞர் சிவவடிவேலு வரவேற்றார்.புலவர் வரதராசன் நன்றி கூறினார்.  ஏற்பாடுகளை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், தமிழக கலை இலக்கியப் பேரவை,திருமறைத் தமிழ்ச்சங்கம்,தமிழ்ச் சான்றோர் பேரவை,மறைக்காட்டு முத்தமிழ்ப் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் செய்திருந்தன.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai