சுடச்சுட

    

    பல்கலை. தேர்வில் சர் ஐசக் நியூட்டன் கல்வியியல் கல்லூரி சிறப்பிடம்

    By நாகப்பட்டினம்  |   Published on : 03rd September 2013 03:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கல்வியியல் கல்லூரிகளுக்கான பல்கலைக்கழகப் பொதுத் தேர்வில், நாகை பாப்பாக்கோவில் சர் ஐசக் நியூட்டன் கல்வியில் கல்லூரி சிறப்பிடம் பெற்றுள்ளது.

    கல்வியியல் கல்லூரிகளுக்கான 2012-13-ம் ஆண்டு பல்கலைக்கழகப் பொதுத் தேர்வில், இந்தக் கல்லூரியின் இளங்கலை மாணவ, மாணவிகள் 96.2 சதம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். முதுகலை கல்வியியல் மாணவ, மாணவிகள் 90 சதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இக்கல்லூரியின் இளங்கலை கல்வியியல் மாணவி பி. ஷர்மிளா 833 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். மாணவி வி. திவ்யதேவி 832 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், மாணவி ஜெ. ஜெயபாரதி 825 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும் பெற்றுள்ளனர்.

    முதுகலை கல்வியியல் மாணவி பி. புனிதவதி 466 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். மாணவிகள் ஜெ.எஸ். பெமினா, பி. நாகேஸ்வரி ஆகியோர் தலா 460 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடம், ஆர். ரீத்து 459 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடம் பெற்றுள்ளார். இவர்களையும், ஆசிரியர்களையும்   கல்வி நிறுவனங்களின் தாளாளர் டி. ஆனந்த் பாராட் டினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai