சுடச்சுட

  

  நாகையில் ஒரு தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் விற்கப்படும் டீசலில் கலப்படம் இருப்பதாகக் கூறி, நாகை, நாகூர் மீனவர்கள் அந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தை திங்கள்கிழமை இரவு முற்றுகையிட்டனர்.

  நாகை அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில், நாகூர் சாமந்தான் பேட்டையைச் சேர்ந்த மீனவர் செல்வேந்திரன் என்பவர் தனது விசைப் படகுக்காக 1,500 லிட்டர் டீசலை திங்கள்கிழமை கொள்முதல் செய்தார்.

  திங்கள்கிழமை மாலை அந்த டீசலை விசைப் படகில் நிரப்ப முயன்ற போது, டீசலின் நிறம் மாறுபட்டு, குழம்பிய நிலையில் இருந்தது. இதையடுத்து, செல்வேந்திரன் மற்றும் நாகூர், நாகை மீனவர்கள் திரளானோர், சர்ச்சைக்குரிய டீசலை விற்ற பெட்ரோல் விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டனர்.  இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

  தகவலறிந்த நாகை வருவாய்க் கோட்டாட்சியர் வே. மணிகண்டன், மாவட்ட வழங்கல் அலுவலர் சித்திரைராஜ், காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கட்ராமன், வட்டாட்சியர் பரிமளம் மற்றும் போலீஸார், பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு வந்து பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

  பின்னர், அந்த பெட்ரோல் விற்பனை நிலையத்திலிருந்து ஒரு லிட்டர் டீசல் சேகரிக்கப்பட்டு அதிகாரிகள் முன்னிலையில் சீலிடப்பட்டது. சீலிடப்பட்ட டீசல் வேதியியல் ஆய்வுக்கு உள்படுத்தப்பட வேண்டும் என வருவாய்க் கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.

  மேலும், உரிய ஆய்வு முடிவு வரும் வரையிலான காலத்தில் அந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யக் கூடாது எனவும் அவர் உத்தரவிட்டார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai