சுடச்சுட

    

    நாகை மாவட்டம்,வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலத்தில் அம்மா திட்ட முகாம் தொடர்பான பிரச்னையை முன்வைத்து திடீர் சாலை மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    வேதாரண்யம் வட்டத்துக்குள்பட்ட ஆயக்காரன்புலம்-3 ஆம் சேத்தி,கோடியக்கரை உள்ளிட்ட 6 இடங்களில் தமிழக அரசின் அம்மா திட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை முகாம்கள் நடத்தப்பட்டன. இவற்றில் ஆயக்காரன்புலம் 3 ஆம் சேத்தி கிராமத்தில் நடைபெற்ற முகாமில் மனுக்களை மாலை 5 மணி வரை பெற்று தீர்வு எடுக்க வேண்டிய அலுவலர்கள் பிற்பகல் சுமார் 3 மணிக்கே முகாமை முடித்து விட்டனராம்.

    இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகள் மனுக்களை கொடுக்க முடியாமலும்,கொடுத்த மனுக்கள் மீதான நடவடிக்கைகளும் முடங்கியதாம். இதையடுத்து ஆயக்காரன்புலம் கடை வீதியில் அந்தப் பகுதி ஒன்றியக் குழு உறுப்பினர் முருகேசன் தலைமையில் பாதிக்கப்பட்ட 50 பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேலானோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். வட்டாட்சியர் ராம்குமார் உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தையில் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

    சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற மறியலால் அந்தப் பகுதியில் படிக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் உள்ளிட்டோர் உரிய நேரத்தில் பேருந்தில் ஏறிச்செல்ல முடியாமல் அவதியுற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai