சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்டம்,மன்னார்குடியில் செவ்வாய்க்கிழமை வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 2 வயது வயது ஆண் குழந்தை இறந்தது.

  பழைய தஞ்சை சாலையை சேர்ந்த ராஜேஷ். இவரது மகன் ரக்சித் (2). ராஜேஷுக்கு மாடி வீடும்,அதனருகிலேயே கூரை வீடும் உள்ளது. கூரை வீட்டின் பின்புறம் இருந்த சுற்றுச்சுவர் சேதமடைந்த நிலையில் இருந்ததாம்.

  செவ்வாய்க்கிழமை மதியம் குழந்தை ரக்சித் கூரை வீட்டின் சுற்றுச்சுவர் அருகே நின்று கொண்டிருந்தபோது திடீரென சுவர் பெயர்ந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்த ரக்சித் சம்பவயிடத்திலேயே இறந்தான்.

  இதுகுறித்து மன்னார்குடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai