சுடச்சுட

  

  கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்ட சிஐடியு சார்பில், நாகை புதிய பேருந்து நிலையம் முன் திங்கள்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும். பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  சிஐடியு மாவட்டத் தலைவர் சீனி. மணி தலைமை வகித்தார்.  சிஐடியு மாவட்டச் செயலர் கே.என்.ஆர். சிவக்குமார், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் ஏ.டி. அன்பழகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்க மாவட்டச் செயலர் எம்.என். பக்கிரிசாமி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் எம். காந்தி, அனைத்து ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலர் சொ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசினர்.  நாகைத் தொழிற்சங்கக் கூட்டமைப்புப் பொதுச் செயலர் சு. சிவகுமார் நிறைவுரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் ப. நாகராஜன் நன்றி கூறினார்.சிஐடியு மற்றும் சார்பு தொழில் சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai