சுடச்சுட

  

  நாகையை அடுத்த நாகூரில் திருமணமான மறுநாளில், மாமியார் வீட்டில் தங்கியிருந்த இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

  நாகூர், ஆர்யநாட்டு தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ரா. ராஜதுரை (25). இவருக்கும், சாமந்தான்பேட்டை அமிர்தா நகரைச் சேர்ந்த குப்புராஜ் மகள் ராஜஸ்ரீக்கும் திங்கள்கிழமை காலை நாகூரில் திருமணம் நடைபெற்றது.

  பெண் வீட்டார் அழைப்பையொட்டி, திங்கள்கிழமை இரவு மணமகள் வீட்டுக்குச் சென்ற மணமக்கள் அங்கு தங்கியிருந்தனர்.  செவ்வாய்க்கிழமை காலை உறங்கிக் கொண்டிருந்த கணவர் ராஜதுரையை மனைவி எழுப்பியபோது, அவர் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

  இதுகுறித்து ராஜதுரையின் தந்தை ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில்,  நாகூர் போலீஸார் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

  ராஜதுரை தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரது மரணத்துக்கு வேறு உடல் நலக் காரணங்கள் ஏதும் உள்ளனவா என்பது பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு தெரியவரும்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai