சுடச்சுட

    

    மன்னார்குடி ஆசிரியர் விருதுக்குத் தேர்வு

    By மன்னார்குடி,  |   Published on : 04th September 2013 02:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் என். ராஜப்பா,நிகழாண்டுக்கான ஆசிரியச் செம்மல் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    திருவாரூர் மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளரும்,மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியருமான இவரை தமிழக கல்வி வளர்ச்சி நிறுவனம் இந்த விருதுக்குத் தேர்வு செய்துள்ளது.

    வரும் 5-ம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் எஸ். ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லதில் நடைபெறவுள்ள விழாவில் தேசிய பசுமைத் தீர்ப்பாய உறுப்பினர் நீதிபதி ஜோதிமணி விருதை வழங்குகிறார்.

    ராஜப்பாவை நாட்டு நலப்பணித் திட்ட இணை இயக்குநர் சி. உஷாராணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் லெ. நிர்மலா, மாவட்டக் கல்வி அலுவலர் விஷ்ணுதாஸ் ஆகியோர் பாராட்டினர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai