சுடச்சுட

    

    மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆயுள் சிறைக் கைதி ஆஜர்

    By மயிலாடுதுறை  |   Published on : 04th September 2013 02:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மயிலாடுதுறையில் ஜவுளிக் கடை உரிமையாளர் கொலை வழக்கில்,  ஆயுள் தண்டனைக் கைதி ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    மயிலாடுதுறை கூறைநாடு வ.உ.சி. தெருவைச் சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளரான பிஆர்கே. சுரேஷ்குமார் (42) கடந்த ஜூலை 29-ல் மர்ம நபர்களால்   கொல்லப்பட்டார்.

    இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸார் விசாரித்து வந்த நிலையில், மயிலாடுதுறை காவிரியாற்றங்கரைத் தெருவைச் சேர்ந்த ஆர். சிரஞ்சீவி (27) ஆக-2-ல் ஈரோடு  நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

    பின்னர் அவரை போலீஸ் காவலில் எடுத்து நடத்திய விசாரணையில் மேலும் 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    மேலும் இதுதொடர்பாக வேறொரு வழக்கில் சென்னை மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ள மயிலாடுதுறை,ஆரோக்கியநாதபுரம் புதுத் தெருவைச் சேர்ந்த தே. கபிரியேல் (42) என்பவரை மயிலாடுதுறை போலீஸார் பரோலில் எடுத்து வந்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தினர்.

    வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி தங்கமணி கணேசன், குற்றம் சாட்டப்பட்டுள்ள கபிரியேலை செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிமுதல் 24 மணி நேரத்திற்கு மட்டுமே போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கவும்,

    விசாரணையை மாவட்டக் கண்காணிப்பாளர் முன் நடத்தவும் உத்தரவிட்டார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai