சுடச்சுட

  

  நாகை மாவட்டம்,வேதாரண்யத்தில் இலங்கை சிறையில் உள்ள  தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் மாவட்டச் செயலர் என். செய்யது முபாரக் தலைமை வகித்தார். 

  இதில் பங்கேற்ற கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் எம். தமிமுன் அன்சாரி பேசியது:

  இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 141 பேரையும் உடனே விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  தமிழக மீனவர்கள் இலங்கையால் தாக்கப்படுவது தடுக்கப்படாததால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது. கடலோரக் கிராம மீனவர்கள் தற்போது அச்சத்தோடு வாழ்கின்றனர்.

  கடந்த 15 ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் 650 பேர் இலங்கைப் கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டும், ஏராளமானோர் படுகாயமடைந்தும்  அவதியுற்று வருகின்றனர். இந்திய, இலங்கை மீனவர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட இரு தரப்பினரும் முறைவைத்து மீன்பிடிக்க வகை செய்ய வேண்டும். மீனவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைக்கும் இலங்கையின் நடவடிக்கையைக் கண்டிக்காத மத்திய அரசின் செயல் கண்டனத்துக்குரியது என்றார் அவர்.

  ஆர்ப்பாட்டத்தை மாநில அமைப்புச் செயலர் ராவுத்தர்ஷா தொடங்கி வைத்தார். மாவட்டத் தலைவர் ஏ.எம். ஜபருல்லாஹ்,பொருளாளர் சதக்கத்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai