Enable Javscript for better performance
மர்மக் காய்ச்சல் : 18 பேர் மருத்துவமனையில் அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    மர்மக் காய்ச்சல் : 18 பேர் மருத்துவமனையில் அனுமதி

    By வேதாரண்யம்,  |   Published on : 05th September 2013 03:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தைச் சேர்ந்த காந்திநகர் பகுதியில் மூட்டு வலியுடன் கூடிய மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 சிறார் உள்பட 18  பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    செட்டிப்புலம் தெற்கு, வடமழை மணக்காடு, தாணிக்கோட்டகம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த இரண்டு மாத இடைவெளியில் மூட்டுவலி, கடும் தலைவலியுடன் கூடிய மர்மக் காய்ச்சலால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமாகியுள்ளனர்.

    அவர்களில் ஒரு சிலருக்கு லெப்டோ பைரோஸிஸ் (எலிக் காய்ச்சல்) மற்றும் சிக்குன் குனியா தாக்கத்தின் அறிகுறி இருந்தது தெரியவந்தது.

    இந்நிலையில்,வேதாரண்யம் நகராட்சிக்குள்பட்ட காந்தி நகர் பகுதியில் செப். 1 -ம் தேதி முதல் கடும் காய்ச்சல் அறிகுறியுடன் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களில் புதன்கிழமை நிலவரப்படி விக்னேஷ்(7), தமிழ்வாணன் (11), பிரசன்னா (3), அருண்ராஜ்(11), தங்கம்மாள் (40), கிருஷ்ணம்மாள் (60), மாரிமுத்து(55), ஜெயம் (40), பானுமதி (47), லதா (35), கௌசிகா (13), சுப்பிரமணியன் (38), ராமசாமி (33), சிங்காரவேல் (37) உள்பட காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 18  பேருக்கு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே, மேற்கண்டவர்கள் தவிர கடந்த சில நாள்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 6 பேர் புதன்கிழமை வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ரத்த மாதிரிகள் எடுத்துப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இந்தப் பகுதியில் சுகாதாரத்துறையினர் குடிநீர்  ஆதாரங்கள் மீது கவனம் செலுத்தி, தடுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai