சுடச்சுட

    

    "அடையாள அட்டையுடன் மீன்பிடிக்கச் செல்ல வேண்டும்'

    By வேதாரண்யம்,  |   Published on : 06th September 2013 03:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும்போது அடையாள அட்டை,படகு உரிமம் போன்றவற்றைத் தவறாது எடுத்துச் செல்ல வேண்டும் என இந்திய கடலோரக் காவல்படையின் காரைக்கால் நிலைய தளபதி உதல்சிங் அறிவுறுத்தினார்.

    நாகை மாவட்டம்,வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் மீனவ கிராமத்தில்  எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் சிறுபடகு மீனவர்களுக்கு ஜி.பி.எஸ். கருவிகள் அளிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

    இதில் பங்கேற்ற உதல்சிங் மேலும் பேசியது:

    இலங்கையால் கைது செய்யப்படும் மீனவர்கள் முன்புபோல குறிப்பிட்ட நாள்களில் விடுவிக்கப்படுவதில்லை. எனவே, மீனவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். கடல் பரப்பில் சந்தேகத்துக்குரிய நபர்கள்,நடவடிக்கைகள் இருந்தால் அருகிலுள்ள பாதுகாப்பு மையங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றார் அவர்.

    விழாவில் ஆராய்ச்சி நிறுவனத்தின் செயல் இயக்குநர் அஜய் கே. பரிடா பங்கேற்று,புஷ்பவனம்,வெள்ளப்பள்ளம்,கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு முதல்கட்டமாக ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 55 ஜி.பி.எஸ் கருவிகளை வழங்கினார். மேலும், சுழல் நிதியாக 10 பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் அளிக்கப்பட்டது.

    அப்போது அவர் பேசும்போது,ஜிபிஎஸ் எனப்படும் திசைகாட்டும் கருவி மீனவர்களுக்கு நண்பனாக இருக்கும். அதில் சர்வதேச எல்லைக்கு 5 கி.மீ.க்கு முன்பு செல்லும்போதே எச்சரிக்கை ஒலிக்கும் தொழில்நுட்பம் உள்ளது. ஆராய்ச்சி நிறுவனம் மூலம் மீன்வளம் குறித்து மீனவர்களுக்கு குறுந்தகவல் அனுப்பும் முறை விரிவுபடுத்தப்படும் என்றார் அவர்.

    ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் வை. செல்வம் தலைமை வகித்தார். நாகை மீன்வள பல்கலைக் கழக பேராசிரியர் சந்தோஷ்குமார், கடலோரப் பாதுகாப்பு குழும ஆய்வாளர் கந்தவேல்,ஆராய்ச்சி நிறுவனத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கே.கே. ரவிச்சந்திரன், சி. வேல்விழி,மீனவ கிராம பஞ்சாயத்து தலைவர் எம். தனபால்,ஜெயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai