ஆசிரியர் தின விழா
By நீடாமங்கலம் | Published on : 06th September 2013 03:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
நீடாமங்கலம் செயின்ட்ஜீட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் விழா,வ.உ. சிதம்பரநாரின் பிறந்த நாள் விழா, அன்னை தெரசாவின் நினைவு நாள் நடைபெற்றது.
பள்ளித் தாளாளர் எஸ். நடராஜன் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் ஜி. விக்னேஷ் முன்னிலை வகித்தார். பள்ளியின் மூத்த முதல்வர் என். சுகுணவதி சிறப்புரையாற்றினார். முதல்வர் எஸ்.பி. ராஜவேல் வரவேற்றார். துணை முதல்வர் ஆர். சார்லஸ் நன்றி கூறினார். இதேபோல, நீடாமங்கலம் நீலன் மெட்ரிக் பள்ளியில் நடந்த விழாவுக்கு தாளாளர் நீலன். அசோகன் தலைமை வகித்தார். முதல்வர் ஜி. புவனேஸ்வரி வரவேற்றார். துணை முதல்வர் ஹானஸ்ட்ராஜ் நன்றி தெரிவித்தார்.