Enable Javscript for better performance
நாகையில் அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நாகையில் அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

    By நாகப்பட்டினம்,  |   Published on : 06th September 2013 03:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணைய மசோதாவைக் கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாகை மாவட்ட ஆட்சியரகம் முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணைய மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்து,  குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றிய மத்திய அரசைக் கண்டித்தும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அரசு ஊழியர் சங்க நாகை வட்டத் தலைவர் எம். ஹரிகிருஷ்ணன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ். ஜோதிமணி, மாநிலத் துணைத் தலைவர் சு. சிவக்குமார், வட்டச் செயலர் ப. அந்துவன்சேரல் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தினர். மாவட்டச் செயலாளர் ஏ.டி. அன்பழகன் நன்றி கூறினார்.

    மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 75 பெண் ஊழியர்கள் உள்பட சுமார் 200-க்கும் அதிகமான அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை அனைத்து வட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai