சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், பெருகவாழ்ந்தான் அருகே வியாழக்கிழமை முன்விரோதம் காரணமாக அதிமுக மாவட்ட பிரதிநிதியும், தேவேந்திரகுல வேளாளர் கட்சி ஒன்றியச் செயலரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதுதொடர்பாக இருவரும் மீதும் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

    பெருகவாழ்ந்தானை அடுத்துள்ள செந்தாமரைகண்ணைச் சேர்ந்த வி.எம். சுப்பிரமணியன் (50). இவர் அதிமுக மாவட்ட பிரதிநிதி மற்றும் மாரநகரி தொடக்க கூட்டுறவு வங்கியின் தலைவராக உள்ளார்.

    தேவதானத்தைச் சேர்ந்த அந்தோனி மகன் பாபு (30). இவர் தேவேந்திர குல வேளாளர் கட்சியின் கோட்டூர் ஒன்றியச் செயலராக உள்ளார். சுப்பிரமணியத்திற்கும், பாபுவிற்க்கும் முன்விரோதம் இருந்து வந்ததாம்.

    இந்நிலையில், வியாழக்கிழமை செந்தாமரைகண் பிரதான வீதியில் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது வாய் தகராறு ஏற்பட்டதாம், பின்னர் ஒருவரையொருவர்  தாக்கிக் கொண்டனராம்.

     இதில் காயமடைந்த சுப்பிரமணியன் மன்னார்குடி அரசு மருத்துவமனையிலும், பாபு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து இருவரும் தனித் தனியே பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai