சுடச்சுட

    

    சிரியா மீது ராணுவத் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள அமெரிக்காவைக் கண்டித்து, நாகை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் நாகை புதிய பேருந்து நிலையம் முன் வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எம். செல்வராசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் ஏ.வி. முருகையன், மார்க்சிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் வி. மாரிமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் சீனிவாசன் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஏ.பி. தமீம் அன்சாரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் எஸ். சம்பந்தம், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலர் சுபாஷ்சந்திர போஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நகர, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai