Enable Javscript for better performance
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

    By நாகப்பட்டினம்,  |   Published on : 07th September 2013 03:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிடக் கோரி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் நாகை மாவட்ட ஆட்சியரகம் முன் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். புதிய ஓய்வுதியத் திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் அறிவரசன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் அன்பழகன், துணைச் செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவாரூர் மாவட்டச் செயலர் தனபாலன், அரசு ஊழியர் சங்க நாகை மாவட்டச் செயலர் ஏ.டி. அன்பழகன், புள்ளியல் துறை அலுவலர்கள் சங்க மாநிலப் பொறுப்பாளர் ப. அந்துவன்சேரல் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai