Enable Javscript for better performance
பெண் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடியில் வியாழக்கிழமை பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

    திருச்சி காரிச்சாம்பட்டி தோகைமலையை சேர்ந்த காளிதாஸ் மனைவி பாலமகேஷ்வரி (32). இவர் அங்குள்ள தனியார் செல்போன் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தபோது உடன் பணியாற்றிய திருச்சி மார்சிங்பேட்டையைச் சேர்ந்த ஜெரால்ட் வில்லியம் மகன் அந்தோனி விமல்நாத்துடன் பழக்கம் ஏற்பட்டதாம்.

    இதையடுத்து, பாலமகேஷ்வரி கணவர், குழந்தையை பிரிந்தும், அந்தோனி விமல்நாத் தனது மனைவி, குழந்தையை பிரிந்து சுமார் ஆறு மாதத்திற்கு முன் மன்னார்குடி வந்து, தாமரைக்குளம் மீன் மார்கெட் அருகே பாலமகேஷ்வரியுடன் வாடகை வீட்டில் குடியேறினார். இந்நிலையில், அந்தோனி விமல்நாத்,பாலமகேஷ்வரி இடையே வியாழக்கிழமை தகராறு ஏற்பட்டதாம்.

    இதில் மனமுடைந்த பாலமகேஷ்வரி, வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தும்,  அங்கு அவர் உயிரிழந்தார். மன்னார்குடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai