சுடச்சுட

    

    வேளாங்கண்ணியில் இன்று அலங்கார தேர்பவனி

    By நாகப்பட்டினம்,  |   Published on : 07th September 2013 03:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா அலங்கார தேர்பவனி சனிக்கிழமை இரவு நடைபெறுகிறது.

    கீழை நாடுகளின் லூர்து எனப் போற்றப்படும் வேளாங்கண்ணி பேராலயம் பசலிக்கா அந்தஸ்து பெற்றது. இந்தப் பேராலய ஆண்டுப் பெருவிழா ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

    நிகழாண்டுக்கான ஆண்டுப் பெருவிழா  ஆக. 29-ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, அலங்கார தேர்பவனி சனிக்கிழமை இரவு நடைபெறுகிறது.

    தேர் பவனியையொட்டி, பேராலய கலையரங்கத்தில் சனிக்கிழமை மாலை 5.15 மணிக்கு தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம் ஆகியன நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து, தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் எம். தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில், சிறப்பு கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

    பின்னர், இரவு சுமார் 7.30 மணிக்கு வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா அலங்காரத் தேர்பவனி நடைபெறுகிறது.

    பேராலய ஆண்டுப் பெருவிழாவையொட்டி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர். சிபிசக்ரவர்த்தி தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai