சுடச்சுட

    

    ஈரோடு மாவட்டத்தில் செங்கல் சூளை ஒன்றில்  கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் அண்மையில் மீட்கப்பட்டனர்.

    நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்துக்குள்பட்ட கொற்கை கிராமத்தைச் சேர்ந்த திருவள்ளுவன்(48), அவரது மனைவி ஜோதி(40), மகன்கள்  திவாகரன்(27), தினகரன்(24) ஆகிய 4 பேரும், ஈரோடு மாவட்டம், அந்தியூரில் ஒருவரது செங்கல் சூளையில் கடந்த 3 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வேலை செய்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில், தினகரன் என்பவர் மட்டும் செங்கல் சூலையிலிருந்து அண்மையில் தப்பி வந்து, கீழ்வேளூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நாகை மாலியைச் சந்தித்து, தங்களது கொத்தடிமை வாழ்க்கை நிலை குறித்து விளக்கியுள்ளார்.

    உடனடியாக, நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமியை சந்தித்த கீழ்வேளூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நாகை மாலி, ஈரோடு மாவட்டத்தில் கொத்தடிமையாக்கப்பட்டுள்ள தினகரனின் குடும்பத்தினரை மீட்க கோரிக்கை விடுத்தார்.

    இது குறித்து மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி மேற்கொண்ட உடனடி நடவடிக்கையின் கீழ், தினகரனின் தந்தை திருவள்ளூவன், தாய் ஜோதி, சகோதரர் திவாகரன் ஆகிய 3 பேரும் அண்ணையில், ஈரோடு மாவட்டம், அந்தியூர் செங்கல் சூளையிலிருந்து மீட்கப்பட்டு, மயிலாடுதுறைக்குக் கொண்டு வரப்பட்டனர்.

    கொத்தடிமை வாழ்க்கையிலிருந்த மீண்ட 4 பேரும், வெள்ளிக்கிழமை நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு. ஆசியா மரியம் மற்றும் கீழ்வேளூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நாகை மாலி ஆகியோரைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai