சுடச்சுட

  

  திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் இருந்து பக்தர்களுக்கு அனுப்பப்படும் விபூதி பிரசாத கவரில் இயந்திரம் மூலம் முகவரி உள்ளிட்டவை பதிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

  கையால் செய்யப்பட்ட இந்தப் பணிகளால் முகவரி மாறிவிடுதல், காலதாமதம், கூடுதல் ஊழியர் சேவை என்ற நிலை இருந்தது. இதையடுத்து, கோவில் நிர்வாகம் போஸ்டல் பிராங்லின் மெஷின் என்ற இயந்திரத்தை இதற்காக சனிக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டுவந்தது.

  கோவில் அலுவலகத்தில் இதை திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர். சிவா தொடக்கிவைத்தார். இதுகுறித்து கோவில் நிர்வாக அலுவலர் ஏ. ராஜராஜன்வீராசாமி கூறியது:

  நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பிரசாதம் அனுப்பவேண்டியுள்ளது. இதில் ஏற்படும் பிரச்னைகளை களையும் வகையில் புதிய இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த இயந்திரம் முகவரி, பையின் எடைக்கு ஏற்ப ஸ்டாம்ப் முத்திரை ஆகியவற்றை கவரில் பதிக்கிறது. இதன்மூலம், மணிக்கு 6000 கவரில் முகவரி பதிக்க முடியும். இந்த இயந்திரத்தின் விலை ரூ. 6 லட்சம். இந்த இயந்திரப் பயன்பாட்டின் மூலம், இனிமேல் பக்தர்களுக்கு முறையாக பிரசாதம் சென்றடையும் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai