சுடச்சுட

    

    நாகை அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோவிலில் பிரமோத்சவ விழா கொடியேற்றம்

    Published on : 08th September 2013 01:10 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் பிரமோத்சவ விழா திருக்கொடியேற்றம் சனிக்கிழமை காலை நடைபெற்றது.

    நாகை அக்கரைப்பேட்டையில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் பிரமோத்சவ விழா ஆண்டு தோறும், சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டுக்கான பிரமோத்சவ விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சுமார் 1,000-க்கும் மேற்பட்ட பெண்கள் பூ தட்டுகளை ஏந்தி ஊர்வலமாகச் சென்று, பூச்சொரிதல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

    பிரமோத்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான திருக்கொடியேற்றம் சனிக்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக, கொடி வீதியுலா நடைபெற்றது. கொடி ஊர்வலத்தின் நிறைவில், சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்ட திருவிழா கொடியேற்றப்பட்டது.

    மாநில மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் உள்பட திரளானோர் கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    பிரமோத்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மற்றும் செடில் உத்சவம் செப். 15-ம் தேதி நடைபெறுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai