சுடச்சுட

    

    நாகை வட்ட விசைப் படகு மீனவர்கள் 2-வது நாளாக சனிக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை, காரைக்கால் மீனவர்கள் 65 பேரையும், அவர்களின் விசைப் படகுகளுடன் விடுவிக்க வலியுறுத்தி, நாகை விசைப் படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்வதென நாகை வட்ட மீனவப் பஞ்சாயத்தில் கடந்த வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

     

    இந்தத் தீர்மானப்படி, நாகை வட்டத்துக்குள்பட்ட 8 கிராமங்களைச் சேர்ந்த விசைப் படகு மீனவர்கள் வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2-வது நாளாக சனிக்கிழமையன்றும் விசைப் படகு மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்தது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai