சுடச்சுட

  

  மயிலாடுதுறை அஞ்சல் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பார்சல்

  Published on : 08th September 2013 02:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகை மாவட்டம், மயிலாடுதுறை தலைமை அஞ்சல் நிலைய கண்காணிப்பாளருக்கு சனிக்கிழமை ஒரு பெட்டி பார்சலில் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

  மயிலாடுதுறை தலைமை அஞ்சல் நிலைய கண்காணிப்பாளர் துரைசாமி. இவரது பெயருக்கு மும்பையிலிருந்து ஒரு பார்சல் அனுப்பப்பட்டிருந்தது. அனுப்பியவரின் முகவரி பார்சலில் சரியாக தெரியாததால், குழப்பமடைந்த அஞ்சல் நிலைய ஊழியர்கள் போலீஸôருக்கு தகவல் தெரிவித்தனர்.

  போலீஸôர் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். மேலும், நாகையிலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதித்தனர். இதில், பார்சலில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்பதை உறுதிசெய்த போலீஸôர், அதை பிரித்துப் பார்த்தனர்.

  பெட்டியினுள் தனியார் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவுள்ள பரிசுகளுக்கான விளம்பர நோட்டீஸ் இருந்ததும், இது மும்பையிலிருந்து, மயிலாடுதுறைக்கு அனுப்பப்பட்டதும் தெரியவந்தது.

  இது அந்த தனியார் நிறுவனத்தால், வழக்கமாக அஞ்சல் நிலைய கண்காணிப்பாளருக்கு அனுப்பப்படும் பார்சல் என்றாலும், தற்போது, அனுப்பியவரின் முகவரி தெரியாததாலும், கண்காணிப்பாளரின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட்டிருந்ததாலும் இந்தக் குழப்பம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai