சுடச்சுட

  

  குத்தாலத்தில் சார்நிலை கருவூலம் திறப்பு

  By  மயிலாடுதுறை  |   Published on : 09th September 2013 09:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகை மாவட்டம், குத்தாலத்தில் புதிய சார்நிலை கருவூலத்தை மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் சனிக்கிழமை திறந்து வைத்தார்.
   விழாவில் அமைச்சர் பேசியது:
   குத்தாலம் வட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை அடுத்து, தமிழக முதல்வர் உத்தரவின் பேரில், இந்த சார்நிலை கருவூலம் திறக்கப்பட்டுள்ளது.
   இதற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூம்புகார் தொகுதிக்கு உள்பட்ட பொறையாரில் சார்நிலை கருவூலத்திற்கு புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா விரைவில் நடைபெறும் என்றார் அமைச்சர். விழாவிற்கு நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தலைமை வகித்தார்.
   பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவர் ஏ.கே. சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
   மாவட்ட வருவாய் அலுவலர் எம். ஆசியா மரியம், மயிலாடுதுறை சார் ஆட்சியர் திவ்ய பிரியதர்சினி, குத்தாலம் ஒன்றியக் குழுத் தலைவர் என். தமிழரசன், பேரூராட்சித் தலைவர் எம்.சி. பாலு, வட்டாட்சியர் வசந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
   மாவட்ட கருவூல அலுவலர் ஆர். சபாபதி வரவேற்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai