சுடச்சுட

    

    திமுக கூட்டணியில் தொடருவோம்: காதர் முஹைதீன் பேச்சு

    By  மயிலாடுதுறை,  |   Published on : 09th September 2013 09:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியிலேயே தொடருவோம் என்றார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் முஹைதீன்.
     மயிலாடுதுறையை அடுத்த நீடூரில், இந்தக் கட்சியின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற இஸ்லாமிய திருமணச் சட்ட விளக்க கருத்தரங்கில் பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது:
     ஜமாத்தில் பதிவுசெய்யப்படும் இஸ்லாமியர்களின் திருமணங்களை அரசுப் பதிவாகவே ஏற்கவேண்டும். அக்டோபர் 5-ம் தேதி சென்னையில் கட்சியின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டமும், மாணவர் மாநாடும் நடைபெறவுள்ளது. இதில் கட்சியின் தேசிய தலைவர்கள் மற்றும் பிற கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
     அனைவருக்கும் ஒரே சிவில் சட்டம் வேண்டும் என்பதற்காக தொடுக்கப்பட்டுள்ள பொதுநல வழக்கை எதிர்கொள்ள வேண்டும். அனைவருக்கும் ஒரேவிதமான சிவில் சட்டம் என்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றார் அவர்.
     கருத்தரங்கிற்கு கட்சியின் நாகை மாவட்டத் தலைவர் மு. அபுல்ஹாசன் தலைமை வகித்தார்.
     தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர் எம். அப்துல்ரஹ்மான், நீடூர் அரபிக் கல்லூரி முதல்வர் ஏ. முஹம்மது இஸ்மாயில் பாஜில் பாக்கவி, கட்சியின் கல்விப் பணிக்கான மாநிலச் செயலாளர் ஏ.எம். ஷாஜஹான், சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநிலப் பொதுச் செயலாளர் கே.எம். நிஜாமுதீன் ஆகியோர் கருத்தரங்கில் பேசினர். கட்சியின் மாவட்டப் பொருளாளர் எம். முஹம்மது யூனுஸ், முஸ்லிம் லீக் கல்வி அறக்கட்டளைத் தலைவர் அ. அப்துல்மஜீது உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் பங்கேற்றனர். கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.ஏ.எம். நூருல்லாஹ் வரவேற்றார். மாவட்ட இளைஞரணி செயலாளர் ஏ. அபுபாரீஸ் நன்றி கூறினார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai