சுடச்சுட

    

    நாகை மாவட்டத்தில்  நிகழாண்டு கல்விக் கடன் இலக்கு ரூ. 60 கோடி:  அமைச்சர் கே.ஏ. ஜெயபால் தகவல்

    By  நாகப்பட்டினம்  |   Published on : 09th September 2013 09:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டத்தில் நிகழாண்டில் மாணவ, மாணவிகளுக்கு ரூ. 60 கோடி கல்விக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் மாநில மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால்.
     நாகை மாவட்ட ஆட்சியரகத்தில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற கல்விக் கடன் வழங்கும் விழாவில் அவர் பேசியது:
     தகுதியான மாணவ, மாணவிகள் அனைவருக்கும் கல்விக் கடன் வழங்கப்படுகிறது. நிகழாண்டில், நாகை மாவட்ட கல்விக் கடன் இலக்கு ரூ. 60 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், பொறியியல், பல் மருத்துவம் உள்ளிட்ட அனைத்துத் தொழில் சார்ந்த படிப்புகளுக்கும் கல்விக் கடன் வழங்கப்படுகிறது.
     பொருளாதார வசதி குறைந்த மாணவ, மாணவிகள் கல்வியைத் தொடராமல் விட்டுவிடக் கூடாது என்பதே கல்விக் கடன் வழங்கப்படுவதின் நோக்கம். வங்கி விதிமுறைப்படி, உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் தகுதியான மாணவ, மாணவிகளுக்கு நிச்சயமாக கல்விக் கடன் வழங்கப்படும் என்றார் அமைச்சர்.
     மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தலைமை வகித்துப் பேசும்போது, நாகை மாவட்டத்தில் நிகழாண்டின் முன்னுரிமைக் கடன்களுக்கான இலக்கு ரூ. 2,196 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கு, கடந்த ஆண்டைவிட 36 சதவீதம் அதிகமாகும். வேளாண் துறைக்கு மட்டும் ரூ. 1,876.9 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
     இதைத் தொடர்ந்து, 350 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 8 கோடி கல்விக் கடனுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
     மாவட்ட ஊராட்சித் தலைவர் ஏ.கே. சந்திரசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் மு. ஆசியா மரியம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளர் எஸ்.என். சிவசாமி, இந்தியன் வங்கி துணைப் பொது மேலாளர் பி. தர்மராஜ், முன்னோடி வங்கி மேலாளர் கதிர்வேல், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வங்கியாளர்கள், மாணவ, மாணவிகள் விழாவில் கலந்துகொண்டனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai