சுடச்சுட

    

    "மாணவர்களுக்கு இலக்கை நோக்கிய பயணம் வேண்டும்'

    By  மயிலாடுதுறை  |   Published on : 09th September 2013 09:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாணவர்கள் உயர்ந்த நிலையை அடைய இலக்கை நோக்கியே பயணிக்க வேண்டும் என்றார் தமிழ்நாடு உயர் கல்வித் துறை கூடுதல் செயலர் முனைவர் ஜே. உமாமகேஸ்வரி.
     நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், சோழம்பேட்டை ஏஜிஆர்ஏ கல்வியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பட்டமளிப்பு விழாவில், 170 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி, மேலும் அவர் பேசியது:
     கல்வி நிலையங்கள் பொருள் ஈட்டுவதை குறிக்கோளாகக் கொண்டு செயல்படாமல் உயரிய நோக்கோடு செயல்பட வேண்டும். மிகச் சாதாரணமானவர்களையும் உயர்ந்த நிலைக்கு மாற்றும் சக்தி வாய்ந்தது கல்வி.
     நல்ல மாணவ சமுதாயத்தை உருவாக்கும் சர்வ வல்லமை படைத்தவர்கள் ஆசிரியர்கள் என்பதால், ஆசிரியர் பணியில் முழு ஈடுபாட்டோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் செயலாற்ற வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வியை மட்டுமே போதிக்காமல், கூடுதல் அறிவையும் போதிக்க வேண்டும். சமுதாயத்தின் மேல் மாணவருக்கு உள்ள கடமை, முடிவு மேற்கொள்வது, சுயமாக சிந்திப்பது போன்றவற்றையும் கற்றுத்தர வேண்டும். பட்டம் பெறும் மாணவர்கள் தனக்கென்று ஓர் இலக்கை வகுத்துக்கொண்டு, அந்த வழியில் சென்றால் வெற்றி எளிதில் கிட்டும் என்றார் அவர். விழாவிற்கு ஏஜிஆர்ஏ கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர் புகழேந்தி தலைமை வகித்தார். பு. சுகந்தி முன்னிலை வகித்தார். முதல்வர் பாலகணபதி ஆண்டறிக்கை வாசித்தார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai