சுடச்சுட

  

  நாகை மாவட்டத்தில் 290 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

  By நாகப்பட்டினம்,  |   Published on : 10th September 2013 10:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்காக நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், 290 புதிய விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.
  விநாயகர் சதுர்த்தியையொட்டி, நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்கள் மற்றும் விநாயகர் கோவில்களில், சுமார் 290 புதிய விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.
  இதில், 90 சிலைகள் திங்கள்கிழமை இரவு ஊர்வலமாகக் கொண்டுச் செல்லப்பட்டு, நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது. மீதமுள்ள விநாயகர் சிலைகள் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ஊர்வலமாகக் கொண்டுச் செல்லப்பட்டு, கரைக்கப்படவுள்ளன.
  நாகையில் விநாயகர் சிலை ஊர்வலம்
  நாகையில் நீலாயதாட்சியம்மன் கோவில், மலையீஸ்வரன் கோவில், ஏழைப் பிள்ளையார் கோவில் உள்பட பல்வேறு பகுதிகளில், புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகளின் ஊர்வலம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
  இந்த ஊர்வலத்தில், நாகை நீலாயதாட்சியம்மன் கோவில் தேரடி பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 32 அடி உயரத்திலான விஸ்வரூப விநாயகர் சிலை பிரதானமாக இடம் பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து, நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் அணிவகுத்தன.
  நாகை அபிராமி அம்மன் திடல் அருகிலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலம், மேளம், நாகஸ்வரம், பம்பை, ஜன்டை உள்ளிட்ட வாத்திய முழக்கங்களுடன் மருத்துவமனை சாலை, பப்ளிக் ஆபீஸ் சாலை, காடம்பாடி, பால்பண்ணைச்சேரி, நாகூர் வழியே நாகூர் வெட்டாற்றுக் கரையில் நிறைவுப் பெற்றது.
  பின்னர், விநாயகர் சிலைகள் வெட்டாற்றிலிருந்து படகில் கொண்டுச் செல்லப்பட்டு, கடல் முகத்துவாரப் பகுதியில் கரைக்கப்பட்டன.
   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai