சுடச்சுட

  

  திருவாவடுதுறை ஆதீனத்தில் விநாயகர் சதுர்த்தி விழா

  By மயிலாடுதுறை,  |   Published on : 11th September 2013 03:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாவடுதுறை ஆதீனத்தில் திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

  விழாவையொட்டி, ஆதீனம் மற்றும் ஆதீன கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், நூல் வெளியீடு, ஆதீன பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  ஞானமா நடராசப் பெருமான் சன்னதி முன் வைக்கப்பட்டிருந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன.

  மாலை நேர நிகழ்வாக, ஆதீன குருமுதல்வர் அருள்மிகு நமச்சிவாய மூர்த்திகள், அருள்மிகு ஞானமா நடராசப் பெருமான் சன்னதிகளில் நடைபெற்ற சிறப்பு  வழிபாடுகளில் திருவாவடுதுறை ஆதீன கர்த்தர் 24-வது குருமகா சன்னிதானம் சீர்வளர்சீர் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் எழுந்தருளினார்.

  இதைத் தொடர்ந்து, ஆதீனம் சார்பில் திருமாளிகைத் தேவர் அருளிய ஒன்பதாம் திருமுறை (திருவிசைப்பா திருப்பல்லாண்டு) என்ற நூலை ஆதீன கர்த்தர் வெளியிட, கும்பகோணம் திருமுறைமன்றத்தின் பால. பாஸ்கரன் பெற்றுக் கொண்டார்.

  விழாவையொட்டி, ஆதீனத்தில் பணியாளர்களின் குழந்தைகள் 30 பேருக்கு கல்வி உதவித் தொகையை ஆதீன கர்த்தர் வழங்கினார்.

  திருவாவடுதுறை ஆதீனத்தோடு இணைந்த அருள்மிகு கோமுத்தீசுவரர் கோவிலில் உள்ள அருள்மிகு வரசித்தி விநாயகர் துணை வந்த விநாயகர், தல விநாயகர், சித்தி  விநாயகர் சன்னதிகளில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளிலும் ஆதீன கர்த்தர் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிகளில் ஆதீன கட்டளைத் தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai