சுடச்சுட

  

  நாகை மாவட்டத்தில் செப். 13-ல் ரேஷன் பொருள் குறைதீர் கூட்டம்

  By நாகப்பட்டினம்,  |   Published on : 11th September 2013 02:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகை மாவட்டத்தில் குடிமைப் பொருள்கள் வழங்கல் குறைதீர் கூட்டம் செப். 13-ம் தேதி நடைபெறுகிறது என ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

  நாகை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் குடிமைப் பொருள்கள் வழங்கல் குறைதீர் கூட்டம் செப். 13-ம் தேதி நடைபெறுகிறது. ஒரு வட்டத்துக்கு ஒரு ஊராட்சி வீதம், தொடர்புடைய ஊராட்சி அலுவலகத்தில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை இந்தக் கூட்டம் நடைபெறும்.

  நியாயவிலைக் கடை தொடர்பான புகார்கள், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், கடை மாற்றம் மற்றும் முகவரி மாற்றம் கோருதல், புதிய குடும்ப அட்டை கோருதல் உள்ளிட்டவைகளுக்கு இந்தக் கூட்டத்தில் மனு அளித்துத் தீர்வுப் பெறலாம்.

  குறைதீர் கூட்டம் நடைபெறுமிடங்களின் விவரம் (வட்டம்- கூட்டம் நடைபெறும் ஊராட்சி):

  நாகை - புத்தகரம், கீழ்வேளூர்- வடக்காளத்தூர், திருக்குவளை- தெற்குப்பனையூர், வேதாரண்யம்- கடினல்வயல், மயிலாடுதுறை- கேசிங்கன், தரங்கம்பாடி- நல்லாடை, சீர்காழி- கொள்ளிடம் கிளை-1. குத்தாலம்- மங்கநல்லூர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai