சுடச்சுட

  

  மயிலாடுதுறையில் பல்வேறு தொழிற்பயிற்சி: செப். 10-ல் நேர்காணல் தொடக்கம்

  By நாகப்பட்டினம்,  |   Published on : 11th September 2013 02:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மயிலாடுதுறையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையம் சார்பில், கணினி போட்டோஷாப் மற்றும் புகைப்பட லேமினேஷன், பிளக்ஸ் போர்டு தயாரிப்பு உள்ளிட்டவற்றுடன் பயிற்சி வரும் 19-ம் தேதி தொடங்கப்படுகிறது.

  இதுகுறித்து மயிலாடுதுறை ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மைய இயக்குநர் வ.சி. பரமசிவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  மயிலாடுதுறை ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையம் சார்பில், இருபாலருக்கும் கணினி போட்டோஷாப் பயிற்சி மற்றும் போட்டோ லாமினேஷன், பிளக்ஸ் போர்டு தயாரித்தல் குறித்துப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. செப். 19-ம் தேதி முதல் செப். 30-ம் தேதி வரை இந்தப் பயிற்சி வகுப்பு நடைபெறும். பயிற்சியில் பங்கேற்போருக்கு மதிய உணவு, தேநீர் இலவசமாக வழங்கப்படும்.

  8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு மேலான கல்வி நிலைக் கொண்டவர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்கலாம். வயது வரம்பு- 18 முதல் 40. பயிற்சியில் பங்கேற்போரைத் தெரிவு செய்வதற்கான நேர்காணல் செப். 10-ம் தேதி தொடங்கி செப். 19-ம் தேதி வரை ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தில் நடைபெறும்.

  பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் தங்களது கல்விச் சான்று, குடும்ப அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல், அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (3) ஆகியவற்றுடன், மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் இயங்கும் ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்துக்கு செப். 19-ம் தேதிக்குள் நேரில் வர வேண்டும்.

  முதலில் வருவோருக்கு முன்னுரிமை. நேர்முகத் தேர்வு அல்லது எழுத்துத் தேர்வு மூலம் பயிற்சியாளர்கள் தெரிவு செய்யப்படுவர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai