சுடச்சுட

  

  வேதாரண்யம் பகுதி கிராமங்களில் காரைக்கால் ஜவாஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மாணவிகள் முகாமிட்டு, இயற்கை முறையில் விவசாயம் குறித்த ஒரு மாதகால விழிப்புணர்வு களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  செட்டிப்புலம் கிராமத்தில் திங்கள்கிழமை முகாமிட்ட கல்லூரி மாணவிகள் 6 பேர் ஊரகவேளாண் பணி குறித்து ஆய்வு செய்தனர்.

  அப்போது, அங்குள்ள விவசாயிகள் மற்றும் மகளிர் குழு உறுப்பினர்களிடையே இயற்கை உர பயன்பாட்டின் அவசியம், உர மேலாண்மை, இயற்கை முறையில் பூச்சிக்கட்டுப்பாடு ஆகிய முறைகள் குறித்து செயல்விளக்கம் செய்து காட்டினர்.

  இதேபோல், கரியாப்பட்டினம் கிராமத்தில் நிலக்கடலை சாகுபடியில் மகசூலை அதிகரிக்கவும், பயிர் வறட்சியை தாங்கி வளரவும் உதவும் மெத்திலோபாக்டீரியாவின் அவசியம் மற்றும் அதை பயன்படுத்தும் முறைகள் குறித்து செயல்விளக்கங்கள் செய்து காட்டினர். இயற்கை முறை முன்னோடி விவசாயி பாலசுப்பிரமணியன், மகளிர் குழு முன்னோடி விவசாயிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

  விழிப்புணர்வு செயல்விளக்கப் பணிகளில் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய  மாணவிகள் சி. சிவரஞ்சனி, கே. சோதிமணி, என். செல்வராஜேஸ்வரி, பி. சௌமியா, கே. ராஜலெட்சுமி, ஜி. ரோஸ்லின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai