சுடச்சுட

    

    2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலைக்கு முயற்சி

    By வேதாரண்யம்  |   Published on : 11th September 2013 02:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் 2 குழந்தைகள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.

    குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தானும் குடித்த தாய் சிகிச்சை பெற்று வருகிறார்.

    வேதாரண்யத்தை அடுத்த கள்ளிமேடு கிராமத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மனைவி கனகவல்லி (29). இவர்களது மகள் கீர்த்தனா (5), மகன் ஸ்ரீராம் (2).

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேதாரண்யம் அருகே நேரிட்ட விபத்தில் சிவசுப்பிரமணியன் உயிரிழந்துவிட்டார்.

    இதையடுத்து, கூலி வேலைகள் செய்து வந்த கனகவல்லியின் குடும்பம் வறுமையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் வாங்கி வைத்திருந்த விஷத்தை தனது குழந்தைகளுக்கு கொடுத்த கனகவல்லி, தானும் குடித்தாராம். இதையடுத்து, அவர்கள் மூவரும் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    இதைத் தொடர்ந்து, கனகவல்லி, கீர்த்தனா ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு கீர்த்தனா செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

    இதனிடையே, மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஸ்ரீராம் உயிரிழந்தான்.

    கனகவல்லி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்துக்கான சரியான காரணம் உடனடியாக தெரியவில்லை.

    இதுகுறித்து வேட்டைக்காரனிருப்பு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai