சுடச்சுட

    

    விநாயகர் சதுர்த்தியையொட்டி, காரைக்கால் நகரில் 31 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் புதன்கிழமை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கிளிஞ்சல்மேடு கடல் பகுதியில் கரைக்கப்பட்டன.

    காரைக்கால் ஸ்ரீ சக்தி விநாயகர் விழா குழு, மாவட்ட இந்து முன்னணி சார்பில் காரைக்கால் நகரில் 31 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன.

    இவை புதன்கிழமை பகல் 1 மணியளவில் காரைக்கால் ஸ்ரீ ஏழை மாரியம்மன் கோவில் அருகே எடுத்துவரப்பட்டு ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.என். திருமுருகன் ஊர்வலத்தைத் தொடக்கிவைத்தார். காரைக்கால் நகரமைப்புக் குழுமத் தலைவர் கே. கோவிந்தராஜ், காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் ஏ. சுரேஷ், திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவில் நிர்வாக அலுவலர் ஏ. ராஜராஜன்வீராசாமி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

    ஊர்வலமாக கிளிஞ்சல்மேடு கடல் பகுதிக்கு எடுத்துவரப்பட்ட விநாயகர் சிலைகள் சிறப்பு பூஜைக்குப் பிறகு படகு மூலம் கடலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.  ஊர்வலத்தையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெங்கடசாமி தலைமையில் ஏராளமான போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai