சுடச்சுட

    

    நாகை மாவட்டம், தரங்கம்பாடி கடலில் 14 விநாயகர் சிலைகள் புதன்கிழமை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

    விநாயகர் சதுர்த்தியையொட்டி, பொறையாறு, காட்டுச்சேரி, தில்லையாடி, ராஜீவ்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.

    பக்தர்களின் வழிபாட்டிற்குப் பிறகு அவை புதன்கிழமை பிற்பகல் பொறையாருக்கு கொண்டுவரப்பட்டன. அங்கிருந்து 14 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தரங்கம்பாடி கடலில் கரைக்கப்பட்டன. பொறையாறு, தில்லையாடி, காட்டுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் விநாயகர் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

    திருவாரூரில்: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம் உள்ளிட்ட இடங்களில் 71 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

    இவை வழிபாட்டுக்குப் பிறகு புதன்கிழமை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டியில் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

    திருவாரூரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 17 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஓடம்போக்கி ஆற்றில் கரைக்கப்பட்டன. இதேபோல, திருத்துறைப்பூண்டியிலும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai