சுடச்சுட

  

  நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தேத்தாக்குடியில் 3 கடைகள் செவ்வாய்க்கிழமை இரவு தீக்கிரையாயின.

  தேத்தாக்குடி தெற்கு கடை வீதியில் இருந்த வாடகைப் பாத்திரக் கடை, கோழிக் கடை உள்ளிட்ட 3 கடைகள் ராசேந்திரன் உள்ளிட்டோருக்குச் சொந்தமானவை.

  இந்த கடைகளில் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென தீ பரவியது. இதில் 3 கடைகளும் எரிந்து நாசமாயின.

  இதில் இருந்த 10 கோழிகள் கருகி உயிரிழந்தன. கடைகளில் இருந்த பாத்திரம் உள்ளிட்டவை முழுவதுமாக சேதமடைந்தன.

  வேதாரண்யம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai