சுடச்சுட

    

    நாகை அக்கரைப்பேட்டை மீனவக் கிராமம் சார்பில், அக்கரைப்பேட்டை கடற்கரையில் சமுத்திர பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

    நாகை அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் பிரமோத்சவ விழா கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் ஒரு நிகழ்வாக சமுத்திர பூஜை நடைபெற்றது.

    இதையொட்டி, புதன்கிழமை காலை அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பிறகு, அபிஷேகத்தில் வைக்கப்பட்டிருந்த கலசம், மீனவப் பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் ஊர்வலமாக அக்கரைப்பேட்டை கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு, சமுத்திரராஜன் மற்றும் கடல் அன்னையை வேண்டி, பால், சந்தனம், தேன், நெய் மற்றும் வாசனைத் திரவியங்களால் சமுத்திரராஜன் மற்றும் கடல் அன்னைக்கு அபிஷேகம் செய்விக்கும் வகையில், அபிஷேகப் பொருள்கள் மிகுந்த மரியாதையுடன் கடலுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. 

    அப்போது, சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் வீடுகளிலிருந்து கொண்டு வந்திருந்த தேங்காய், பூ, பழம் போன்ற பூஜை பொருள்களை பக்தியுடன் கடலில் அர்ப்பணித்து வழிபட்டனர்.

    சுனாமி போன்ற இயற்கை இடர்பாடுகள் நிகழாமலிருக்கவும், தொழில் மேன்மை மற்றும் உலக நன்மையை வேண்டியும் இந்த வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.

    கடல் வழிபாட்டில் ஈடுபட்டவர்கள், ஊர்வலமாக கோவிலுக்குச் சென்று, அங்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai