சுடச்சுட

  

  இயற்கை முறையிலிருந்து தயாரிக்கப்படும் பஞ்சகவ்யம் பயிர்களுக்கு சிறந்த உரமாக ஊக்கமளித்து மகசூலை அதிகரிக்கும் சிறப்புத் தன்மையடையது என வேளாண் கல்லூரி மாணவிகள் தெரிவித்தனர்.

  நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதி கிராமங்களில் காரைக்கால் ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மாணவிகள் முகாமிட்டு இயற்கை முறையில் விவசாயம் குறித்த ஒரு மாதக்கால விழிப்புணர்வு களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  குரவப்புலம் கிராமத்தில் புதன்கிழமை முகாமிட்ட மாணவிகள் 7 பேர் ஊரக வேளாண் பணி குறித்து ஆய்வு செய்தனர். அங்குள்ள விவசாயிகள் மற்றும் மகளிர் குழு உறுப்பினர்களிடையே இயற்கை விவசாயம், இயற்கை முறையில் பூச்சி கட்டுப்பாடு ஆகிய முறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.

  பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறை குறித்து செயல் விளக்கம் அளித்த அவர்கள், இதை பயன்படுத்துவதால் பயிர்களுக்கு நல்ல இயற்கை உரமும், ஊக்கமும் கிடைத்து மகசூலை அதிகரிக்கச் செய்யும் என்றனர்.

  இங்குள்ள சீதாலட்சுமி உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவர்களுடன் இணைந்து மாதிரி காய்கறித் தோட்டம் அமைத்த கல்லூரி மாணவிகள், பயன்தரும் காய்கறி செடிகளை நடவு செய்தனர்.

  விழிப்புணர்வு செயல்விளக்கப் பணிகளில் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய  மாணவிகள் க. இந்துமதி, ஜா. ஜெனிட்டா, ஜிப்னா அனி ஜியார்ஜ், ம. கல்பனா,

  ச. கல்யாணி,வே. சுருதி, ந. கார்த்திகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai