Enable Javscript for better performance
பெண்களுக்கு எதிரானஅநீதி போராடும் மகளிர் குழுக்கள் பரிசுக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    பெண்களுக்கு எதிரானஅநீதி போராடும் மகளிர் குழுக்கள் பரிசுக்கு விண்ணப்பிக்கலாம்

    By dn  |   Published on : 12th September 2013 12:29 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் சமூக அநீதிகளை எதிர்த்துப் போராடும் மகளிர் குழுக்கள் தமிழக அரசின் பரிசுக்கு விண்ணப்பிக்கலாம்.

    இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை எதிர்த்துப் போராடிய மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அரசு சார்பில் பரிசு வழங்கப்படவுள்ளது. மாநில அளவில் 5 குழுக்களுக்குத் தலா ரூ. 1 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.

    பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் வரதட்சிணைக் கொடுமை உள்ளிட்ட சமூக அநீதிகள் மற்றும் வன்கொடுமைகளை எதிர்த்துப் போராடும் மகளிர் குழுக்கள் இந்தப் பரிசுக்கு விண்ணப்பிக்கலாம்.

    பரிசுக்கான கருத்துகளை, தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) மூலம் செப். 31-ம் தேதிக்குள், மாவட்ட மகளிர் திட்ட அலுவலருக்குக் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai