சுடச்சுட

  

  பணியாளர்கள் இல்லாத நாகை மாவட்டம்,வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டகம் தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்க வங்கியை அந்த சங்கத்தின் நிர்வாகக் குழு இயக்குநர்கள் வியாழக்கிழமை பூட்டிச் சென்றனர்.

  கடந்த 2010-11-ல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு வழங்கிய கடன் தள்ளுபடித் தொகையில் ரூ. 11.92 லட்சம் மோசடி செய்யப்பட்டது  அண்மையில் உறுதியானது.

  இதையடுத்து,அந்தக் கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் செயலர் தாணிக்கோட்டகம், தேவன்காடு பகுதி வி. சங்கரன்,தற்போதய செயலர் ஆர். இந்திராணி,

  முன்னாள் எழுத்தர் மணக்காடு ப. கிருஷ்ணமூர்த்தி,தற்போதைய எழுத்தர் வை. கார்த்திக்கேயன் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.  இவர்களில் கிருஷ்ணமூர்த்தி செப்.4-ல் கைது செய்யப்பட்ட நிலையில் மற்ற மூவரும் தலைமறைவாகினர். இதையடுத்து,செயலர் இந்திராணி,எழுத்தர் கார்த்திகேயன் ஆகியோரை கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாகக் குழு பணியிடை நீக்கம் செய்தது.

  இதைத் தொடர்ந்து,எழுத்தர் தமிழ்ச்செல்வன் மற்றும் தாற்காலிக பணியாளர் ஒருவருடன் வங்கி திறக்கப்பட்டு வந்த நிலையில்,கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் அதன் தலைவர் முருகானந்தம் தலைமையில் வியாழக்கிழமை கூடியது. அதில் முக்கிய அறைக் கதவுகளுக்கான சாவிகளை நிர்வாகக் குழுவுக்கு தெரியாமல்  வைத்திருந்ததாகவும்,மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு சாதகமாகச் செயல்படுவதாகவும் கூறி எழுத்தர் தமிழ்ச்செல்வனையும் பணியிடை நீக்கம் செய்யத் தீர்மானிக்கப்பட்டது.

  இதையடுத்து  பணியாளர்கள் இல்லாததால் வங்கியை சங்கத்தின் நிர்வாகக் குழு இயக்குநர்கள் வியாழக்கிழமை பூட்டி சீல் வைத்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai