Enable Javscript for better performance
சாராயம் விற்பதைத் தடுக்கக் கோரி மாதர் சங்கம் மறியல் - Dinamani

சுடச்சுட

    

    சாராயம் விற்பதைத் தடுக்கக் கோரி மாதர் சங்கம் மறியல்

    By நாகப்பட்டினம்  |   Published on : 13th September 2013 03:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம், கீழ்வேளூர் காவல் சரகத்துக்குள்பட்ட தேவூர் பகுதியில் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்கக் கோரி ஜனநாயக மாதர் சங்கம் (மார்க்சிஸ்ட் சார்பு) சார்பில் தேவூர் கடைவீதியில் சாலை மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    சங்க கீழ்வேளூர் ஒன்றியச் செயலர் எம். சாந்தி தலைமை வகித்தார்.  மாதர் சங்க மாவட்டத் தலைவர் டி. லதா, மாவட்டச் செயலர் ஜி. கலைச்செல்வி,மாதர் சங்க ஒன்றியத் தலைவர் என். அமுதா, ஒன்றியப் பொருளாளர் ஏ. ரேவதி, மாவட்டக் குழு உறுப்பினர் ஆர். வளர்மதி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ். சுபாதேவி, ஜி. ராஜம், கே. ராஜாமணி, விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியத் துணைத் தலைவர் ஜெ. கவிதா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.  இந்தப் போராட்டத்தால், தேவூர் வழியேயான போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் தடைபட்டது.

     மறியலில் பங்கேற்ற 170 பேரை கீழ்வேளூர் போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai