சுடச்சுட

    

    மன்னார்குடியில் நிகழ்ந்த சாலை விபத்தில் சமையல்காரர் ஒருவர் இறந்தார்.

    மன்னார்குடி ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் ராஜா (35), சமையல்காரர். இவர் தனது மொபெட்டில் நீடாமங்கலம் அருகேயுள்ள ஆதனூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்த மற்றொரு சமையல்காரர் நாராயணனுடன் கடந்த 10-ம் தேதி இரவு கோயில்வெண்ணி கிராமத்துக்கு சமையல் வேலைக்காகச் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த வாகன மீட்பு ஊர்தி மோதி இருவரும் காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்குச் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை இரவு ராஜா இறந்தார்.

    இதுகுறித்து நீடாமங்கலம் காவல் ஆய்வாளர் (பொ) நீலாவதி மற்றும் போலீஸார்  விசாரிக்கின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai