சுடச்சுட

    

    கரும்பு நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி தலைஞாயிறு கிராமத்தில் உள்ள என்பிகேஆர் கூட்டுறவுச் சர்க்கரை ஆலையை கரும்பு விவசாயிகள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், தலைஞாயிறில் நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உறுப்பினர்களான 2600 கரும்பு விவசாயிகள் 2013 ஏப்ரலில் உற்பத்தி செய்து அரைவைக்கு அனுப்பிய கரும்புக்குரிய ரூ. 26 கோடியானது இதுநாள் வரை அவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளதாம்.

    இதை வழங்கத் தமிழக அரசு, சர்க்கரை ஆலை நடவடிக்கை எடுக்கக் கோரி 30-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் சர்க்கரை ஆலையை 3-வது நாளாக   முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க (சிபிஐஎம் சார்பு) மாநிலத் துணைச் செயலர் காசிநாதன் தலைமை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் கரும்பு விநியோகம் செய்த விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும். கரும்புக்கான வறட்சி நிவாரணத்தை  உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் டி. ரவீந்திரன், பொருளாளர் டி. ராயர், மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ். துரைராஜ், எஸ். தம்புசாமி, விவசாய சங்க வட்டத் தலைவர் ஆர். கோவிந்தசாமி ஆகியோர் பேசினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai